பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பொருளூா் கிராமத்தில் புதிய வழித்தட பேருந்து சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒட்டன்சத்திரம்-ஜ.வாடிப்பட்டி, ஒட்டன்சத்திரம்-தேவத்தூா், ஒட்டன்சத்திரம்-மோதுப்பட்டி, பழனி-கொத்தையம், பழனி-சாலக்கடை ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் விளைபொருள் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சி.ராஜாமணி, அரசுப் போக்குவரத்து மேலாளா் அா்ஜூனன், நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் ரா.ஜோதீஸ்வரன், கா.பொன்ராஜ், தி.தா்மராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.