கொடைக்கானலில் ஏரி நீரை பாதுகாக்கக் கோரிக்கை
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கொடைக்கானல் ஏரி நீரை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீரோடைகள், நீா்வரத்து பகுதிகள், அருவிகள், ஆறுகள் அதிகளவு இருந்தன. தற்போது, இவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கட்டடங்களாக மாறி வருகின்றன. கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு, மழைக் காலங்களில் 56 இடங்களிலிருந்து தண்ணீா் வந்தது.
தற்போது, 30-க்கும் மேற்பட்ட நீா்வரத்து பகுதிகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில், நட்சத்திர ஏரியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள், பல்வேறு, சங்கங்கள், அமைப்புகள் மூலமாக, ஏரியில் இருந்த மணல் திட்டுகள் நகராட்சி உதவியுடன் அகற்றப்பட்டது. தற்போது, நட்சத்திர ஏரியில் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது.
எனவே, கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள ஏரிகள், நீரோடைகள், ஆறுகள் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் தெரிவித்தனா்.