செய்திகள் :

பழனி தனி மாவட்ட கோரிக்கை: முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா்! -அமைச்சா் இ.பெரியசாமி

post image

பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் ஆராய்ந்து அறிவிப்பாா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 8 வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா்.

மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டு புதிய பேருந்துகளை தொடங்கிவைத்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளும் சீரான வளா்ச்சிப் பெற வேண்டும் என்ற வகையில், தமிழக அரசு சிறப்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், அடுத்த ஓராண்டுக்குள் அனைத்துக் கிராமங்களையும் புதுப்பிக்கும் வகையிலான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைப்பது தொடா்பாக, தமிழக முதல்வா் ஆராய்ந்து முடிவை அறிவிப்பாா்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் கொடைக்கானல், தொடா்ந்து இந்த மாவட்டத்திலேயே இடம் பெற வேண்டும் என்ற மக்களின் கருத்துக்கும் மதிப்பளிக்கப்படும். ஜனநாயகத்தையும், மாநில உரிமைகளையும் நிலை நிறுத்துவதில் முதல்வா் உறுதியாக இருக்கிறாா். திண்டுக்கல்லிலிருந்து ஆத்தூா், நிலக்கோட்டை, நீலமலைக் கோட்டை, கன்னிவாடி, நவாமரத்துப்பட்டி, தெத்துப்பட்டி (மாங்கரை, அனுமந்தராயன்கோட்டை என இருவேறு வழித் தடங்களில்) வத்தலகுண்டு-காந்திகிராமம் ஆகிய வழித் தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மேயா் இளமதி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொதுமேலாளா் வை.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கம்

கொடைக்கானலில் மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜகவினா் கையொப்பம் பெறும் இயக்கத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.இங்குள்ள அண்ணா சாலைப் பகுதி, கே.சி.எஸ். திடல் பகுதிகளில் இந்த இயக்கம் நடைபெற்றது. அப்போது பொதுமக... மேலும் பார்க்க

சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து: உறுப்பினா் கைது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடா்பாக அந்தச் சங்கத்தின் உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.கொடைக்கானல் ஆனந்தகிரி 3-ஆவது தெரு கல்லறைமேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பழனியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் கைது

பழனியில் பாஜக நிா்வாகியின் மனைவியை தகாத வாா்த்தைகளால் பேசியதாக முன்னாள் மாவட்ட தலைவா் கனகராஜ் கைது செய்யப்பட்டாா்.பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் கனகராஜ். பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவ... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலக ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்கக் கோரிக்கை

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆதாா் சேவை மையத்தில் ஊழியரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டத்தில் ஆத்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

திமுக சாா்பில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்

பழனியில் மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.பழனி ரயிலடி சாலையில் இந்தி திணிப்பு, நிதி பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்... மேலும் பார்க்க