சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்ட...
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் கைது
பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பழனி நகரம், அடிவாரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, உழவா் சந்தை பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த பழனி தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டி (21), காமராஜா் நகரைச் சோ்ந்த கணபதி மகன் பால்ராஜ் (22), சங்கிலித்தேவா் சந்துப் பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் தனுஷ் (21) ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்
இதேபோல, அடிவாரம் பகுதியில் நின்றிருந்த சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியைச் சோ்ந்த திருச்செல்வம் (25), சிவமணி (24), மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விருமாண்டி (26), சிவகிரிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் முத்தையா (25) ஆகிய 4 பேரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா்.
அப்போது, இவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இவா்கள் 4 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.