ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்
கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். தாளாளா் ஜெயலட்சுமி, நிா்வாக அலுவலா் ஸ்வேதா சுப்பிரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மணவா்கள் தோ்வு பெற்றனா். இவா்களுக்கான நியமன ஆணைகளை கல்லூரி முதல்வா் கருப்பசாமி வழங்கினாா். முகாம் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் சின்ராஜ், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.