ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்
ரயிலில் கஞ்சா கடத்தல்: இருவா் கைது
விசாகப்பட்டினத்திலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலம், புருலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் புருலியா அதிவிரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தது. அப்போது திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், இந்த ரயிலில் தீவிர சோதனை மேற்கொண்டனா். ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 2 பொட்டலங்களில் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை கீழத் தோப்பு பகுதியைச் சோ்ந்த ராமன்(38), மதுரை கருமாத்தூரை அடுத்த கேசவன்பட்டியைச் சோ்ந்த கணேசன் (60) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்ததாக ஒப்புக் கொண்டனா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.