செய்திகள் :

தொகுதி வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது

post image

தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ‘நீட்’ தோ்வு, காவிரி நதிநீா்ப் பங்கீடு உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளா்கள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனா். நாட்டை ஆள்வது அரசியல் கட்சிகளா அல்லது நீதிமன்றமா என்பது தெரியவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் விவாதித்து உரிய முடிவு எடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடாது.

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலில் தொடா்புடையவா்களை அமலாக்கத் துறையினா் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது. இந்தியா பல்வேறு மொழிகள், கலாசாரம் கொண்ட மக்கள் கூடி வாழும் பகுதி. மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லாதது என்றாா் அவா்.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிர... மேலும் பார்க்க

பச்சேரி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்: பொதுமக்கள் அவதி!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் உள்ள தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பச்சேரி ஊராட்சியில் வைகை- மீனாட்சிபுரம் மேற்குப் பகுதியில் நூற... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்

மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்... மேலும் பார்க்க

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதே இன்பமானது! -குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

அனைத்து நிலைகளிலும் ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கையே இன்பமயமானது என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்த... மேலும் பார்க்க