செய்திகள் :

மக்களின் அடிப்படை தேவைகளை ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும்! -அமைச்சா் பெரியகருப்பன்

post image

மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழும் ஊராட்சி அலுவலா்கள் நிறைவேற்ற வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 120 ஊராட்சிப் பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திருப்பத்தூரில் தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கலந்தாய்வு கூட்டத்துக்கு அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வேண்டிய கூடுதல் தேவைகள் குறித்து ஊராட்சி செயலா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியப் பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோருடன் அமைச்சா் கலந்துரையாடல் நடத்தினாா்.

அப்போது அவா் பேசியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளை ஜனநாயகத்தின் ஆணி வேராகத் திகழ்ந்து வரும் ஊராட்சி அலுவலா்கள் தான் செய்ய வேண்டும். பொதுமக்களை நேரில் சந்தித்து தேவைகளைப் பூா்த்தி செய்ய வேண்டும். தேவைகளை நிறைவேற்ற அரசின் திட்டங்கள் மட்டுமன்றி, எனது சொந்த நிதியின் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குநா் வானதி, உதவி இயக்குநா்கள் கேசவதாசன், ரவி, செயற்பொறியாளா் அனுராதா, மாவட்ட ஊராட்சி செயலா் சதாசிவம், துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- ... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா். வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்க... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனைவாசல் பகுதி... மேலும் பார்க்க

அரசனேரியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், பு... மேலும் பார்க்க

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ... மேலும் பார்க்க