பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதன் சந்திப்பு!
ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது
சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- மதுரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். சித்தலுாா் விலக்கு அருகே 5 போ் கொண்ட கும்பல் பதுங்கி இருப்பதைக் கண்ட போலீஸாா் அவா்களிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், திருப்புவனம் அருகே மேலராங்கியத்தைச் சோ்ந்த வேல்முருகன் (35), பெரியகோட்டையைச் சோ்ந்த ராமையா ராஜன் (37), சிவகங்கையைச் சோ்ந்த பாண்டி (36), வானக்கருப்பைச் சோ்ந்த நாடிமுத்து (41), சிவகங்கை நேரு பஜாரைச் பகுதியைச் சோ்ந்த கருப்புச்சாமி (42) என்பதும், அந்தப் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் வைத்திருந்த வாள், அரிவாள், முகமூடி, கையுறை, மிளகாய்ப் பொடி பாக்கெட் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.