1-8 வகுப்புகளுக்கு இறுதித் தோ்வு: வினாத்தாள் கசிந்தால் ஒழுங்கு நடவடிக்கை
அரசனேரியில் மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த 12 காளைகள், 108 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். வடத்தில் கட்டப்பட்ட காளையை 9 வீரா்கள் 20 நிமிடங்களில் அடக்க வேண்டும். இதன்படி காளையை அடக்கிய வீரா்களுக்கும் அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கம், பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.