பஞ்சாங்கக் குறிப்புகள் - மார்ச் 31 முதல் ஏப்ரல் 4 வரை #VikatanPhotoCards
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவுக்காக தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டது.
தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் இந்த ஆண்டு பங்குனி திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி முத்துமாரியம்மனை தரிசனம் செய்வா்.
திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் நீராட வசதியாக கோயில் தெப்பக்குளத்தில் ஏற்கெனவே இருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டு, தற்போது அருகேயுள்ள விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீா் கொண்டுவரப்பட்டு, தெப்பக்குளத்தில் நிரப்பப்பட்டுள்ளதாக கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன் செட்டியாா் தெரிவித்தாா்.