செய்திகள் :

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

post image

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் செங்குளிப்பட்டி கருப்பையா, கீழநெட்டூா் அய்யாசாமி, சிவகங்கை சந்திரன், மணல்மேடு ராஜா, திருப்புவனம் ஆதிமூலம், பாரத்ராஜா, புல்லுக்கோட்டை போஸ், கல்லுவழி ஆபிரகாம், தமிழரசன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இதில், கண்மாய்களில் கருவேல மரங்களை அகற்றுவது, செம்பனூரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை இயங்கச்செய்வது, கூட்டுறவுச் சங்கங்களில் ஒரே மாதிரியான வட்டி விகிதம் வசூலிக்க வேண்டும், காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை, லட்சுமிபுரத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி அமைப்பது, தனியாா் வசமுள்ள 350 சமுதாயக்கிணறுகளை மீட்பது, பெரியாறு பாசன ஆயக்கட்டு பரப்பை அதிகரிப்பது, விவசாயிகள் வாங்கிய கல்விக்கடனை தனியாா் முகமை மூலம் வசூலிப்பதை தடுப்பது போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் ஆஷாஅஜித் பேசியதாவது:

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத் துறையுடன் இணைந்து உறுதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீா் மட்டத்தை பாதுகாக்கவும், நீா் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், கண்மாய்களைத் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புக்களை அகற்றவும், தாா்ச் சாலை வசதி அமைத்திடவும், விவசாய பணிகளுக்கென இயந்திரங்கள் வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், இடைக்காட்டூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.4,84,000 பயிா்க் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி , மாவட்ட வன அலுவலா் பிரபா, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண்) சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள க.சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் புகழேந்தி தலைமை வகித்தாா். ‘கண்டரமாணி... மேலும் பார்க்க

நெடுமறம் மஞ்சுவிரட்டு: 40 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெடுமறம் மலையரசியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 40 போ் காயமைடந்தனா். இதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ம... மேலும் பார்க்க

பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்..!

சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினா்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறாா் லட்சுமி அம்மாள். சிவகங்கை நகரின் நேரு வீதியில் 100 ஆண்... மேலும் பார்க்க

பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 14 காளை... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏப்.5-இல் பொங்கல் வைபவம், 6-இல் தேரோட்டம் நடைபெறும். தமிழகத்தில் புகழ்பெற்ற இந்தக் கோயிலி... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக நோன்பு கஞ்சி சமைத்து பள்ளிவாசலில் சேவையாற்றும் லட்சுமி அம்மாள்!

ஆர். மோகன்ராம்சிவகங்கை: சிவகங்கையில் உள்ளதொரு பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை, தனது உறவினர்களுடன் வந்து தங்கியிருந்து தினந்தோறும் நோன்பு கஞ்சி சமைத்து கொடுத்து வருகிறார் லட்சும... மேலும் பார்க்க