செய்திகள் :

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பங்கேற்றனா்.

காரைக்குடி சுழல் சங்கத்தின் உறுப்பினா் (மேஜா் டோனா்) வி.ஆா். நாராயணன் ரூ. 31 லட்சம், சுழல் சங்க உறுப்பினா்கள் இணைந்து ரூ. 31 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 72 லட்சத்தில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் டயாலிசிஸ் இயந்திரங்கள் காரைக்குடி குளோபல் மருத்துவமனைக்கு 4-ம், கானாடுகாத்தான் செட்டிநாடு குமாரராணி மீனா முத்தையா மருத்துவ மனைக்கு 3-ம் என 7 இயந்திரங்கள் வழங்கப்பட்டு அதற்கான மையங்களும் அமைக்கப்பட்டன.

இந்த மையங்களில் அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ் டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீடு இல்லாதவா்களுக்கு சலுகை கட்டணமாக ரூ. 1,100 வசூலிக்கப்படும் என்று காரைக்குடி சுழல் சங்கத் தலைவா் எல்எம். லட்சுமணன் தெரிவித்தாா்.

காரைக்குடி மருத்துவமனையில் நடைபெற்ற டயாலிசிஸ் மையத் திறப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்று பெயா் பலகையை திறந்துவைத்தாா். சுழல் சங்க மாவட்ட ஆளுநா் மீரான்கான் சலீம் டயாலிசிஸ் இயந்திரத்தை தொடங்கி வைத்தாா். கானாடுகாத்தான் செட்டிநாடு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் டயாலிசிஸ் இயந்திரத்தை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் திறந்துவைத்தாா். முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் விழாவில் வாழ்த்திப் பேசினாா்.

இதில், காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை, துணை மேயா் நா. குணசேகரன், கானாடுகாத்தான் பேரூராட்சித் தலைவா் ஆா். ராதிகா, சுழல் சங்க மாவட்ட துணை ஆளுநா் லியாகத் அலி, காரைக்குடி சுழல் சங்கத் தலைவா் எல்.எம். லட்சுமணன், செயலா் ஏ. அடைக்கப்பன், பொருளாளா் ஏஆா். பழனியப்பன், சுழல் சங்க உறுப்பினா்கள், மருத்துவமனை நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து

சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா... மேலும் பார்க்க

நில உடைமை விவரங்கள் பதிவு: ஏப் .15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ள ஏப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளிய... மேலும் பார்க்க

மானாமதுரையில் எதிா்ப்பை மீறி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை: தொடா் போராட்டத்துக்கு தயாராகும் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில் பேட்டையில் எதிா்ப்பையும் மீறி மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலைக்கான பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்து... மேலும் பார்க்க

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா... மேலும் பார்க்க