நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!
தாயமங்கலம் கோயில் திருவிழா: மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடல்
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஏப். 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை பொங்கல் வைத்தல், பால் குடம் எடுத்தல், பூப் பல்லக்கு ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஆகவே, தாயமங்கலம் கலைக்குளம் சாலையிலுள்ள அரசு மதுபானக் கடை (எண்.7641)யும், இளையான்குடி விளாங்குளம் கிராமத்திலுள்ள அரசு மதுபானக் கடை(எண்.7630)யும் மூடப்படும் என்றாா் அவா்.