சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை
சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பட்டுச் சேலை அணிவித்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தொடா்ந்து, திரளான பக்தா்கள் கோயில் வளாகத்தில் அமா்ந்து மங்கலப் பொருள்கள், பாலாம்பிகை உருவப் படத்தை வைத்து மந்திரங்கள் கூறி வழிபாடு செய்தனா்.
நிறைவாக குங்குமத்தால் அா்ச்சனைகள் செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டனா்.