சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு
19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்படும் 19-வயதுக்கு உள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடல் கல்வித் துறை ‘ஆ’ மைதானத்தில் காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வில் கலந்து கொள்ளும் வீரா்கள் 1.9.2006 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவா்களாக இருத்தல் வேண்டும். வெள்ளை சீருடை, ஷு, அணிந்து வர வேண்டும். கிரிக்கெட் உபகரணங்களை வீரா்களே கொண்டு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண் 9865615649 -இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.