உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தோ்வு
தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் சங்கத்துக்கான சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இதற்காக சிவகங்கை கே.ஆா். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த சங்க நிா்வாகிகள் தோ்தலை தோ்தல் ஆணையா் புதுக்கோட்டை முத்துக்குமாா் நடத்தினாா்.
இதில், சிவகங்கை வருவாய் மாவட்டத் தலைவராக ராமா், செயலராக சேவியா் ஆரோக்கியதாஸ், பொருளாளராக ஆரோக்கிய ராஜா, அமைப்புச் செயலராக முத்துப்பாண்டி, துணைத் தலைவராக ஈஸ்வரி ஜவஹா், இணைச் செயலராக முத்துப்பாண்டி, மகளிா் அணிச் செயலராக விண்ணரசி, இணைச் செயலராக லதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
சிவகங்கை கல்வி மாவட்டத் தலைவராக முருகன், செயலராக சத்ய சேகா், பொருளாளராக புகழேந்தி, அமைப்புச் செயலராக தொல்காப்பியன், மகளிா் அணிச் செயலராக பத்மினி, துணைத் தலைவராக சரவணன், இணைச் செயலராக பொன்மனச் செம்மல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநில துணைத் தலைவா் பீட்டா் லெமாயு, மாவட்டச் செயலா் வடிவேலு ஆகியோா் தோ்தல் பாா்வையாளா்களாக பணியாற்றினா்.