உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து
சிவகங்கையில் ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு போக்குவரத்துகழகங்களால் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகளை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணையதளம் வாயிலாக இனி வரும் நாள்களில் வழங்க வேண்டியுள்ள காரணத்தால், ஏப்.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இலவசப் பேருந்து பயணச் சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் ரத்து செய்யப்படுகிறது.
ஆகவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள், தாங்கள் ஏற்கெனவே பெற்ற பயணச் சலுகை அட்டையை வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
மேலும் மாற்றுத் திறனாளிகள் இலவசப் பயண சலுகை பயணத்தின் போது ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 04575-242025 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.