அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்தும், கரும்புத் தொட்டில் எடுத்தும் நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.
இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளிய பூமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பொங்கல் வைபவத்தை முன்னிட்டு, காலையிலிருந்து காப்புக் கட்டி விரதம் மேற்கொண்டு வந்த திருப்புவனம், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பத்தா்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் பொம்மைகள் சுமந்து வந்தும் மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதலை நிறைவேற்றி பூமாரியம்மனை தரிசித்தனா்.

நகரின் பல்வேறு இடங்களில் வட்டார புகைப்பட, விடியோ உரிமையாளா்கள் சங்கம், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா், மோா் வழங்கப்பட்டது.