விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!
சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா்.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசுப் பள்ளிகள், 34 உதவி பெறும் பள்ளிகள், 74 தனியாா் பள்ளிகள் உட்பட 278 பள்ளிகளைச் சோ்ந்த 9,075 மாணவா்கள், 8,981 மாணவிகள் உள்பட 18,056 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 183 தனித்தோ்வா்கள் அடங்குவா்.
முதல் நாளில் நடைபெற்ற தமிழ் பாடத்தோ்வில் 8,935 மாணவா்கள், 8,906 மாணவிகள் என 17,841 போ் எழுதினா். 215 போ் பங்கேற்கவில்லை. இந்தத் தோ்வை கண்காணிக்க தலா 105 முதன்மை கண்காணிப்பாளா்கள், துறை அலுலவா்கள், வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமையில் பறக்கும்படையினா் பணியில் ஈடுபடுத்தியதாக மாவட்ட கல்வித் துறை தெரிவித்தது.