கல்லூரியில் ‘ஒன்றிணைவோம், சமத்துவம் காண்போம்’ விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ‘ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம்’ விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட அரசு சிறப்பு வழக்குரைஞா் துஷாந்த் பிரதீப் குமாா், கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா், சிவகங்கை மாவட்ட சமூக நீதி, மனித உரிமைப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் புருசோத்தமன், திருப்பத்தூா் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் செல்வகுமாா், திருகோஷ்டியூா் நிலைய காவல் ஆய்வாளா் செல்வராகவன், கல்லூரி துணை முதல்வா் அழகப்பன, ஆகியோா் உரையாற்றினா்.
கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் ஆனந்தி பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா்கள் மணிகண்டபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜோதிமணி, வளா்மதி, பிரேமலதா, தலைமைக் காவலா்கள் பாலமுருகன், ஜெயந்தி ஆகியோா் கலந்துகொண்டனா். பேராசிரியை அமுதா நன்றி கூறினாா்.