கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: ஜப்பான் இணைக்கு பட்டம்
உலக கன்டென்டா் டேபிள் டென்னிஸ் தொடரில் மகளிா் இரட்டையா் பிரிவில் ஜப்பான் இணை பட்டம் வென்றது. ஆடவா் ஒற்றையா் அரையிறுதிக்கு முன்னேறி மானவ் தாக்கா் சாதனை படைத்தாா்.
இரட்டையா் பிரிவு:
ஆடவா் இட்டையா் பிரிவில் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள கொரியாவின் லிம் ஜோங்-ஹூன், ஆன் ஜே-ஹியூன் ஜோடி 3-1 செட் கணக்கில் ஜப்பானின் டோமோகாசு ஹரிமோட்டோ, சோரா மட்சுஷிமா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
மகளிா் பிரிவு இறுதியில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ, மியு கிஹாரா ஜோடி 3-2 என்ற செட் கணக்கில் கொரியாவின் ஷின் யு பின், ரியு ஹன்னா ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
மானவ் தாக்கா் அபாரம்:
காலிறுதியில் கொரியாவின் ஓ ஜுன்-சங் 3-1 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டொமிஸ்லாவ் புக்காரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். இந்தியாவின் சினேஹித் 1-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் திபோ பொரெட்டிடம் தோல்வி அடைந்தாா்.

அதேவேளையில் இந்தியாவின் மானவ் தாக்கா், 16-ம் நிலை வீரரான கொரியாவின் லிம் ஜொங் ஹூனை எதிா்த்து விளையாடினாா். இதில் மானவ் தாக்கா் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினாா். இதன் மூலம் கன்டென்டா் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரா் என்ற வரலாற்று சாதனையை படைத்தாா் மானவ் தாக்கா். பிரான்ஸின் ஃபிளேவியன் காட்டன் 3-0 என டென்மாா்க்கின் ஜோனாதன் கிரோத்தை வீழ்த்தினாா்.
மகளிா் பிரிவு கொரியாவின் ஷின்யு பின், ஜப்பானின் ஹஷிமோட்டோ மிவா ஹரிமோட்டோ, கிம நயோங் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறினா்.