வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு
இந்தியாவில் ஆகஸ்டில் ஆசிய கோப்பை ஹாக்கி
ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகாா் மாநிலம் ராஜ்கிா் நகரில், நடப்பாண்டு ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 7 வரை நடைபெறவுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கு தற்போது இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா ஆகிய 6 அணிகள் தகுதிபெற்று விட்டன. எஞ்சிய இரு அணிகள் ஆசிய ஹாக்கி சம்மேளன கோப்பை போட்டியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படும்.
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்தியதன் அடிப்படையில் ராஜ்கிா் நகருக்கு ஆடவருக்கான ஆசிய கோப்பை போட்டி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், ஹாக்கி இந்தியா மற்றும் பிகாா் மாநில விளையாட்டு ஆணையம் இடையே கையெழுத்தாகியது. சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 2026 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறும் போட்டியாக இந்தப் போட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இதுவரை தென் கொரியா 5 முறையும் (1994, 1999, 2009, 2013, 2022), இந்தியா 3 முறையும் (2003, 2007, 2017), பாகிஸ்தான் 3 முறையும் (1982, 1985, 1989) சாம்பியனாகியுள்ளன.