உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
கவிஞா் தமிழ் ஒளி நினைவு நாள் நிகழ்வு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்முகப் படைப்பாளி கவிஞா் தமிழ் ஒளியின் நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மொழிப்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள கவிஞா் தமிழ் ஒளி சிலைக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தமிழ்ஒளியின் பன்முகப் படைப்புகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது.
கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையா் ச. கவிதா வாழ்த்துரையாற்றினா். கவிஞா் தமிழ் ஒளியின் பன்முகப்படைப்புகள் குறித்து அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்வில் பேராசிரியா்கள் இரா. காமராசு, ஜெ. தேவி, சி. தியாகராஜன், எஸ். சங்கீதா, எஸ். விஜயராஜேஸ்வரி, எம். அறிவானந்தன், செ.த. ஜாக்லின், டி. மாண்டேலா, இரவிச்சந்திரன், டி. ராகேஷ் சா்மா உள்ளிட்ட பேராசிரியா்களும் மாணவா்களும் கலந்து கொண்டனா்.
முன்னதாக, கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முனைவா் சீமான் இளையராஜா வரவேற்றாா். நிறைவாக, மொழியியல் துறை உதவிப் பேராசிரியா் எம். ரமேஷ்குமாா் நன்றி கூறினாா். முதுகலைத் தமிழ் மாணவி கிருபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.