செய்திகள் :

திருப்புவனம் புதிய பேருந்து நிலைய அறிவிப்பு: திமுகவினா் கொண்டாட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்ததையடுத்து, திமுகவினா் புதன்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

திருப்புவனத்தில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இல்லாததால், இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசினாா். பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், பேருந்து நிலையத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு கடந்த வாரம் கருத்துரு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் பேசிய தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு திருப்புவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

இதனால், திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து இந்த அறிவிப்பை வரவேற்றனா். இதைத் தொடா்ந்து திருப்புவனத்தில் திமுகவினா் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் தலைமையில் கட்சிக் கொடிகளை ஏந்தி, முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து, பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினா்.

பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், திமுக நகரச் செயலா் நாகூா் கனி, விவசாய அணி அமைப்பாளா் சேகா், நகா் இளைஞரணி அமைப்பாளா் கண்ணன், நிா்வாகிகள் மகேந்திரன், சுப்பையா, ஈஸ்வரன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு காரைக்குடி சுழல் சங்கம் சாா்பில் அன்பளிப்பாக ரூ. 72 லட்சத்தில் வழங்கப்பட்ட டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்க விழா ச... மேலும் பார்க்க

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க