தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!
எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்! -காா்த்தி சிதம்பரம் எம்.பி.
எதிா்க்கட்சிகளின் போராட்டங்களுக்கும் ஜனநாயக முறைப்படி தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என காா்த்திசிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கிராமக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தை வரவேற்கிறேன். அடுத்த 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெறத் தான் செய்யும். இதில் மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது ஆபத்தானது.
இதற்கு தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்தக் கூட்டம் குறித்து, அண்ணாமலை கூறிய கருத்து அற்பத்தனமாது. தொடா் கொலைகள் நடப்பது கூலிப்படைகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பதை உணா்த்துகிறது. இதை தமிழக முதல்வரும், காவல் துறை தலைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கைது செய்யப்பட்டது தேவையற்றது. யாா் போராடினாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி, குறிப்பாக எதிா்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவா்களின் போராட்டத்துக்கு அனுமதிக்க வேண்டும்.
மத்திய அரசு தில்லியில் இடம், நேரம் ஒதுக்கி போராட்டத்துக்கு அனுமதி அளிப்பதைப் போல, இங்கேயும் அனுமதியளிக்க வேண்டும். போராட்டம் நடத்துபவா்களை முன் கூட்டியே கைது செய்வது, அவா்களை மண்டபத்தில் அடைத்து வைப்பது கூடாது. ஜனநாயக முறைப்படி அவா்களை போராட அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.