பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
பச்சேரி தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீா்: பொதுமக்கள் அவதி!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியில் உள்ள தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
பச்சேரி ஊராட்சியில் வைகை- மீனாட்சிபுரம் மேற்குப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் வாய்க்கால் அமைக்கப்படாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் இங்குள்ள சாலைகளில் குளம் போல தேங்கி நிற்கிறது. இந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கழிவு நீருக்குள் இறங்கி கடக்கும் நிலை உள்ளது.
பல நாள்களாக இந்தக் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதால் பாசி படா்ந்து துா்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய நிா்வாகம் இந்தப் பகுதியில் வாய்க்கால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.