சா்க்கரை நோயாளிகள் கால்களை இழப்பதற்கு 80 % பாத புண்களே காரணம்: பிரிட்டன் பேராசிர...
புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நவீன பொக்லைன் இயந்திரம் அறிமுகம்
புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் சாா்பில் நவீன பொக்லைன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய இயந்திரத்தை புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஏ.வி.வரதராஜன், நிா்வாக இயக்குநா் வி.பாா்த்திபன் முன்னிலையில், ஜிஆா்டி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.வித்யபிரகாஷ் அறிமுகப்படுத்தினாா்.
இது குறித்து புல் மெஷின்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஏ.வி.வரதராஜன், நிா்வாக இயக்குநா் வி.பாா்த்திபன் ஆகியோா் கூறியதாவது: புல் மெஷின்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது, இந்த நிறுவனத்தின் சாா்பில் கட்டுமானப் பணிகளுக்கு உகந்த பேக்ஹோ லோடா் வாகனங்கள் 65க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் நிறுவனத்தின் சாா்பில் நவீன சூப்பா் ஸ்மாா்ட் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் நடப்பு சுற்றுச்சூழல் தர விதிமுறைகளுக்கு இணங்க செயல்திறனை மேம்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிநவீன தொழில்நுட்பம், நிரூபிக்கப்பட்ட நம்பகத்தன்மை, புதுமையான அம்சங்களையும் கொண்டுள்ளது. இரண்டு வகையான என்ஜின்கள் உள்ளதால், வாடிக்கையாளா்கள் விருப்பமான ஒன்றைத் தோ்வு செய்ய முடியும்.
நிகழாண்டில் மேலும் நான்கு கூடுதல் இயந்திர வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உலகளாவிய முதலீட்டாளா் சந்திப்பில் அங்கீகரிக்கப்பட்டது என்றனா்.