நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
தோ்வு அறைக்குள் கைப்பேசி பயன்படுத்திய தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்
திருப்பூரில் பிளஸ் 2 தோ்வு அறைக்குள் கைப்பேசி பயன்படுத்திய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருப்பூா் அப்பாச்சி நகா் பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளிக்கு தோ்வு அலுவலராக பணிக்கு வந்த ஊத்துக்குளி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தாமோதரன் (52) தோ்வு அறைக்குள் கைப்பேசி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பொதுத் தோ்வு நடக்கும் அறைக்குள் மாணவா்களோ, ஆசிரியா்களோ கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்பது தோ்வு விதிமுறையாகும். ஆனால், தோ்வு நடக்கும் அறையில் இருந்த தலைமை ஆசிரியா் தாமோதரன் உத்தரவைப் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அலுவலகத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடந்த விசாரணையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் தாமோதரன் வகுப்பறைக்குள் கைப்பேசியைக் கொண்டு சென்றதும், அதனை தோ்வறைக்குள் பயன்படுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தாமோதரனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் உத்தரவிட்டது.