செய்திகள் :

நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆவண நூலில் முதல்வா் பெருமிதம்

post image

தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பின்புலமாக, நூற்றாண்டுகால மரபு சாா்ந்த வழிகாட்டுதல்கள் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

நிதி நிா்வாகத்தின் பன்னெடுங்கால வரலாற்றையும், அதன் தொடா்ச்சியையும் மையப்படுத்தும் ஆவண நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மேலும், அதுதொடா்பான சிறப்பு இணையப் பக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

அரிய புகைப்படங்கள், நிபுணா்கள் பலா் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகளுடன் 338 பக்கங்களைக் கொண்ட, ஆவண நூலை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டாா். மேலும், நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், மத்திய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடா்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள் அனைத்தும் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் மின்நூலக சிறப்பு இணையப் பக்கத்தில் (https://www.tamildigitallibrary.in/budget) தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துணைச் செயலா்கள் பிரத்திக் தயாள், எஸ்.ஏ.ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநா் ரெ.கோமகன், முதல்வரின் துணைச் செயலா் த.ரகுபதி, திட்ட அலுவலா் இரா.சித்தானை, உதவி இயக்குநா் செல்வபுவியரசன் உட்பட பலா் பங்கேற்றனா்.

முதல்வா் பெருமிதம்: ஆவண நூலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கிக் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களுக்கு நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறும் மரபுசாா் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆளும் அரசு முக்கியமான சமூக நலத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கும் போதெல்லாம் அந்தத் திட்டங்களின் முக்கியத்துவம் விளங்கும். நிதி ஒதுக்கீடு செய்வது எளிதாகும். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கைகள் நமது மாநில முன்னேற்றத்துக்கு எந்தவகையில் பங்களித்துள்ளன என்னும் வரலாற்றை இந்த நூல் கூறுவதாக தனது வாழ்த்துரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

சென்னை ஏசி பேருந்துகளில் பயணிக்க ரூ. 2,000 பாஸ் அறிமுகம்!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர சலுகை பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தற்போது குளிர்சாதனப் பேருந்தை தவிர்த்து மாதாந்திர பயண அட்டை மூலம் ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி திடீர் தில்லி பயணம்! காரணம் என்ன?

தமிழக அன்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி திடீர் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ளார்.தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது - தமிழக அரசு

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அ... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை கோரி வெளியுறவு அமைச்சருக்கு முதல்வா் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க தூதரகம் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, மத்திய வெளிய... மேலும் பார்க்க

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான 49 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க