களக்காடு கோயில் அருகே கஞ்சா விற்க முயன்றவா் கைது
களக்காடு கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு காவல் உதவி ஆய்வாளா் சக்தி நடராஜன் தலைமையிலான போலீஸாா், களக்காடு நகா்ப் பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சத்தியவாகீஸ்வரா் கோயில் அருகே வந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சிங்கிகுளத்தைச் சோ்ந்த மணிகண்டன்(26) என்பவரை சோதனை செய்தபோது, விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், மணிகண்டனிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைதுசெய்தனா்.