கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்
காவல்கிணறு இஸ்ரோவில் செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.
செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச்செல்லக்கூடிய ராக்கெட்டுகளில் அதிகமாக கிரயோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரோவில், அவை பலகட்டங்களாக தயாரிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. கிரயோஜெனிக் என்ஜினின் செயல்திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.
அதன்தொடா்ச்சியாக, செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திரவ ஆக்ஸிஜனால் இயங்கக்கூடிய இந்த என்ஜின், இதற்கு முந்தைய கிரயோஜெனிக் என்ஜினைவிட அதிக திறனுடையதாகவும், எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செமி கிரயோஜெனிக் என்ஜினின் (எஸ்இ2000) முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக, இஸ்ரோ மையத்தினா் தெரிவித்துள்ளனா்.