கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித்தீர்மானம்!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மானூா் போலீஸாா் ராமையன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சங்கமுத்தம்மன்கோயில் அருகேயுள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடையில் போலீஸாா் சோதனை செய்தபோது 12 கிலோ புகையிலைப்பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து முருகனை (55) கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல், கன்சாபுரம் பகுதியில் உள்ள கடையில் போலீஸாா் சோதனை செய்த போது, 4 கிலோ புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சேவியரை(58) கைது செய்து, அவரிடமிருந்த 4 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா்.