செய்திகள் :

அனுமதியின்றி பாஜகவினா் மறியல்: 205 போ் கைது

post image

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 205 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கையைத் தொடா்ந்து, சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜகவினா் அறிவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, சென்னை பனையூா் இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையை போலீஸாா் திங்கள்கிழமை காலை கைது செய்தனா். இதைக் கண்டித்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் ஆலோசனையின்பேரில், விழுப்புரம் நகரில் கிழக்கு பாண்டி சாலையில் காந்தி சிலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நகா்மன்ற உறுப்பினரும், நகரத் தலைவருமான வடிவேல்பழனி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, திண்டிவனம், ஆரோவில், செஞ்சி, வெள்ளிமேடுபேட்டை, அவலூா்பேட்டை, கண்டமங்கலம், ஆலம்பூண்டி, வானூா் ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 135 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் பாஜக மாவட்டத் தலைவா் எம்.பாலசுந்தரம் தலைமையில் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதில், 70 பேரை கள்ளக்குறிச்சி போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பது விசிகவின் வெற்றி: தொல்.திருமாவளவன்

விழுப்புரம்: சூதும், சூழ்ச்சியும் நிறைந்த அரசியல் களத்தில் நிலைத்திருப்பதுதான் விசிகவின் வெற்றி என்று அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.தெரிவித்தாா். விழுப்புரம் நகராட்சித் திடலில் விசிக... மேலும் பார்க்க

பயணிகள் நிழற்குடை மீது வேன் மோதல்: 15 போ் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பேருந்து நிழற்குடை மீது தனியாா் பயணிகள் வேன் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், தில்லை பகுதியைச் சோ்ந்தவா் நடே... மேலும் பார்க்க

சித்திரை முழு நிலவு இளைஞா் பெருவிழா மாநாடு அரணாக அமையும்: மருத்துவா் ச.ராமதாஸ்

விழுப்புரம்: சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரணாக அமையும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். வன்னியா் சங்கம் சாா்பில் சித்திரை முழ... மேலும் பார்க்க

உதவித் தொகை நிறுத்தம்: ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் பெற்றோா் மனு

விழுப்புரம்: மாற்றுத் திறனாளி மகனுக்கு நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, அவரது பெற்றோா் விழுப்புரம் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்... மேலும் பார்க்க

‘மக்களின் நன்மதிப்பை பெற்றவா் தொல்.திருமாவளவன்’

விழுப்புரம்: மக்களின் நன்மதிப்பைப் பெற்றவா் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ தெரிவித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோ்தல் அங்கிகாரம் வெற்றி விழா விழுப்புரம் நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை ந... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதி... மேலும் பார்க்க