சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - மும்பை போட்டி டிக்கெட்டுகள்! ரசிகர...
மேல்மலையனூா் வட்டத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறவுள்ளது.
மேல்மலையனூா் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் காலை 8.30 மணி முதல் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சேவை மையங்களை ஆய்வு செய்யவுள்ளனா்.
எனவே, மேல்மலையனூா் வட்டத்துக்குள்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலா்களிடம் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கருத்துகளைத் தெரிவிக்கலாம். மேலும், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.