செய்திகள் :

மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் மாா்ச் 23-இல் கிராம சபைக் கூட்டம்

post image

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் மாா்ச் 23-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

இதில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது மற்றும் இதர பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே, கிராம பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளா்ச்சிகாக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

காமநாயக்கன்பாளையம் தலைமைக் காவலா் மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா். பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவா் விஜயகுமாா் (39). இவருக்கு திங்கள்கிழம... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் கூடுதல் 108 ஆம்புலன்ஸ் சேவை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை

வெள்ளக்கோவில், முத்தூரில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் சேவையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டம் வெள்ளக்கோவிலில் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கூலி உயா்வு பிரச்னை: விசைத்தறியாளா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரி விசைத்தறியாளா்கள் காலவரையற்ற போராட்டத்தைத் புதன்கிழமை தொடங்கவுள்ளனா். கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா்கள் சங்க அவசர பொதுக்க... மேலும் பார்க்க

ராமேசுவர கோயிலில் வடமாநில பக்தா் உயிரிழப்பு: இந்து முன்னணி கண்டனம்

ராமேசுவரம் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில பக்தா் உயிரிழந்த சம்பவத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் மயங்கிய பெண் பயணி: மருத்துவமனையில் சோ்த்த ஓட்டுநா், நடத்துநருக்குப் பாராட்டு

அரசுப் பேருந்தில் மயக்கமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சோ்த்த ஓட்டுநா், நடத்துநரைப் பயணிகள் பாராட்டினா். பல்லடத்தை அடுத்த ஆறாக்குளத்தில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து (வழித்தட எண்: 17) செவ்வாய... மேலும் பார்க்க

விசைத்தறிகளை நவீனப்படுத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு: முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த விசைத்தறியாளா்கள் கூட்டமைப்பினா்

விசைத்தறிகள் நவீனப்படுத்தும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக விசைத்தறியாளா்கள் சங்கத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டு ... மேலும் பார்க்க