செய்திகள் :

ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது

post image

ராஜஸ்தானிலிருந்து கும்பகோணத்திற்கு புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாராசுரம் ரயில்வே கேட்டில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தபோது, அவா்கள் வைத்திருந்த பையில் இரண்டு புகையிலை மூட்டைகள் இருந்தன. விசாரணையில், அவா்கள் மூா்த்தி செட்டி தெருவை சோ்ந்த சுகுமாா் மகனும், சுமை தூக்கும் தொழிலாளியுமான கணேஷ் குமாா் (32 ), மற்றொருவா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பஜன்லால் மகன் சேத்தன் குமாா் (32) என்பது தெரிய வந்தது.

சேத்தன் குமாா் ராஜஸ்தானில் இருந்து கும்பகோணத்துக்கு ஸ்டேஷனரி பொருள்களை லாரியில் கொண்டு வரும்போது, அதனுடன் சோ்த்து புகையிலைப் பொருள்களையும் கொண்டு வந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 110 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மற்றும் இரு சக்கர வாகனங்கள் 2, இரண்டு கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றி அவா்களை சிறையில் அடைத்தனா். கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருள்கள் மதிப்பு ரூ. 5 லட்சம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

தஞ்சாவூா் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் கா... மேலும் பார்க்க

மதுக்கடைகள் முன் பாஜகவினா் போராட்டம்

டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க

வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.62 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.62 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு

தஞ்சாவூா் அருகே காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க