நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை
காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு
தஞ்சாவூா் அருகே காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறை தீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 625 மனுக்கள் வந்தன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மின் கலனால் இயங்கும் தலா ரூ. 1.05 லட்சம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளை ஆட்சியா் வழங்கினாா். இதையடுத்து, செங்கிப்பட்டி பகுதியில் காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயி சேகருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் ஆனந்த குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சங்கா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுப. கமலகண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.