செய்திகள் :

மரணமடைந்த தாய்! ஆசி பெற்று பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி!

post image

தஞ்சாவூரில் திடீரென தாய் உயிரிழந்த நிலையில், கதறி அழுதபடி தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுதுவதற்காக அவரது மகள் சென்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக் கோட்டை கிராமத்தில் ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் - கலா தம்பதியின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 (உயிரியல் பாடப் பிரிவு) படித்து வருகிறார்.

இந்த நிலையில் காவியாவின் தாய் கலா, இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது வீட்டில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாணவி காவியாவுக்கு இன்று காலை உயிரியல் பாடத்தின் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், தாய் உயிரிழந்த சோகத்துடன் பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்குச் சென்றுள்ளார் காவியா.

பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள தாயின் காலில் விழுந்து அழுதபடி ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார். காவியாவுக்கு சக மாணவிகள் ஆறுதல் கூறி தேர்வுக்கு அனுப்பிவைத்தனர்.

தாயின் மறைவு குறித்து மாணவி காவியா கூறியதாவது:

“நான் ஒவ்வொரு முறையும் தேர்வெழுத செல்லும்போது என் தாயின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவேன். அப்போது அவர்கள் எனக்கு வாழ்த்துச் சொல்வார். படிப்பு முக்கியம், நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

இன்று எனது தாய் இறந்துவிட்டார். எனக்கு படிப்பு முக்கியம் என்பதால் நான் இன்று தேர்வு எழுத வந்துள்ளேன்” என்று கூறினார்.

காவியாவின் தந்தை ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர். காவியாவுக்கு காயத்ரி என்ற மூத்த சகோதரியும், திருச்செல்வம் என்ற மூத்த சகோதரரும் உள்ளனர். திருச்செல்வம் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.ஏ. படித்து வருகிறார். காயத்ரிக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ராஜேந்திரன் மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த பக்தா் திடீா் உயிரிழப்பு

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் பெரிய கோயிலில் வழிபட ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (68) தனது கு... மேலும் பார்க்க

ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் சரண்

தஞ்சாவூா் அருகே ரௌடி கொலை வழக்கில் தேடப்பட்டவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்தவா் குறுந்தையன் (50). காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் மீ... மேலும் பார்க்க

விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சடலத்துடன் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் சாலை விபத்தில் இறந்த ஓட்டுநா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், ச... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய கூலி வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு தொழிலாளா் துறைக்குத் தேசியத் தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் எம். வெங்க... மேலும் பார்க்க

தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவி

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தாய் திடீரென உயிரிழந்த துக்கத்திலும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வில் அவரது மகள் பங்கேற்றாா். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த வெட்டுவாக்கோட்ட... மேலும் பார்க்க

ஆலையின் புகையால் பாதிப்பு: 10 கிராம மக்கள் புகாா்

தஞ்சாவூா் அருகேயுள்ள தனியாா் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்படுவதாகக் கூறி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் 10 கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மா... மேலும் பார்க்க