செய்திகள் :

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? - அண்ணாமலை கேள்வி

post image

திடீரென்று போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டத்துக்கு செல்லும் முன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நானோ, பாஜக நிர்வாகிகளோ பேசக் கூடாது என தமிழ்நாடு அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். தேதி சொல்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். தேவையெனில் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்தே திமுக சந்திக்கவுள்ளது. நாட்டிலேயே மிக மோசமான ஊழல் அரசியல்வாதி எனில் அது செந்தில் பாலாஜிதான் என்றார்.

இதற்கிடையே அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.

அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே போர்வை உறையில் தமிழ்!

ரயில்வே பயணிகள் போர்வை உறைகளில் தமிழ் உள்பட 3 மொழிகளில் அச்சிட தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுவந்த நிலையில், ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மார்ச் 17 முத... மேலும் பார்க்க

காவல் துறையை இனி தூங்கவிடமாட்டேன்: அண்ணாமலை

இன்று இரவு முதல் காவல் துறையை தூங்கவிடமாட்டேன் என்று கைதாகி விடுதலை செய்யப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்துக்குச் சென்ற மாநில தலைவர் ... மேலும் பார்க்க

பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

பாஜகவினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பா... மேலும் பார்க்க

மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழ... மேலும் பார்க்க

பாஜக - திமுக மறைமுக கூட்டணி: தவெக

பாஜக - திமுக புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெ... மேலும் பார்க்க