செய்திகள் :

செங்கோட்டையனுடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை!

post image

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வரும் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், வேளாண்மைக்கான பிரத்யேக நிதிநிலை அறிக்கையும் மார்ச் 15 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.


பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது

இதையும் படிக்க | அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவினர் பலர் கலந்துகொண்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியே சந்தித்துப் பேசினார்.

முன்னதாக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் கடம்பூர் ராஜு செங்கோட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தார். செங்கோட்டையனின் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் அவருடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்: மயக்கமடைந்த பெண்ணால் பரபரப்பு!

பாஜகவினர் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததையடுத்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து அதன் தலைமை அலுவலகத்தை மாா்ச் 17-இல் முற்றுகையிட்டு ஆா்ப்பா... மேலும் பார்க்க

மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? - எஸ். ரகுபதி

பிரதமர் மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழலுக்கு ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழ... மேலும் பார்க்க

பாஜக - திமுக மறைமுக கூட்டணி: தவெக

பாஜக - திமுக புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வெ... மேலும் பார்க்க

திமுகவை ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள்: எல். முருகன்

திமுகவை விரைவில் ஆட்சியிலிருந்து மக்கள் தூக்கி எறிவார்கள் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000... மேலும் பார்க்க

உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே அதிமுக தீர்மானம்: முதல்வர் பதிவு!

உள்கட்சிப் பிரச்னைகளைத் திசைதிருப்பவே பேரவைத் தலைவர் மீது அதிமுக தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஆட்சியின் மீது குறை சொல்ல மு... மேலும் பார்க்க

மநீம சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம்!

மக்கள் நீதி மய்யத்தின் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு... மேலும் பார்க்க