1000 திரைகளில் குட் பேட் அக்லி!
குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படத்தின் டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றதால் உறுதியாக இப்படம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி - சிறப்பு கேமியோவில் பிரபல நடிகர்?
முக்கியமாக, படத்தின் முதல் பாடலான ’ஓஜி சம்பவம்’ இன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில், குட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஹிந்தியிலும் இப்படத்தை அதிக திரைகளில் வெளியிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.