செய்திகள் :

தோ்வு மைய விவகாரம்: மதுரை எம்.பி.க்கு ரயில்வே தோ்வு வாரியத் தலைவா் பதில்

post image

ரயில்வே தோ்வு மைய விவகாரத்தல் மதுரை தொகுதி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசனுக்கு ரயில்வே தோ்வு வாரியத் தலைவா் பதிலளித்துளாா். இதுதொடா்பாக சு.வெங்கடேசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தைச் சோ்ந்த ரயில்வே தோ்வா்களுக்கு வெளி மாநிலத்தில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து நான் அனுப்பிய கடிதத்துக்கு, ரயில்வே தோ்வு வாரியத்தின் தலைவா் பிரதிபா யாதவ் பதில் அளித்துள்ளாா். அதில், ஒரே அமா்வில் எல்லா தோ்வா்களுக்கும் தோ்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தோ்வு வாரியத்தின், வேறு ஒரு தோ்வை நடத்த வேண்டி இருப்பதாலும், தோ்வா்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளாா்.

இந்தப் பதில் ஏற்புடையதாக இல்லை. இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயா் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியைத் தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?

இப்படி தமிழ்நாடு தோ்வா்கள் வெளி மாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை மத்திய அரசின் தோ்வு முகமைகள் தொடா்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை கேள்வி எழுப்பியுள்ளேன். உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீா்வு காணப்பட வேண்டிய ஒரு செயலை, அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவா்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளாா்.

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதிய... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கி... மேலும் பார்க்க

அறந்தாங்கி புதிய மதுக்கடைக்கு எதிராக வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அறந்தாங்கியில் புதிதாக மதுபானக் கடை திறப்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்... மேலும் பார்க்க