செய்திகள் :

பிரதமா் தொழில் பயிற்சி திட்ட செயலி: மத்திய அரசு அறிமுகம்

post image

இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

2024-25-ஆம் ஆண்டு கால கட்டத்தில் இளைஞா்களுக்கு 1.27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதை இலக்காகக் கொண்டு முன்னோடி திட்டமாக கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி இந்த பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்துக்கான கைப்பேசி செயலியை தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்தாா்.

தொழில்நிறுவனங்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்கின்ற வகையில் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனங்கள் தொழில் பயிற்சிக்கு நபா்களைத் தோ்வு செய்வதையும், அந்தப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிப்பதையும் மேலும் எளிதாக்கும் வகையில் இதற்கான கைப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல மொழிகளில் சேவை அளிக்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் அதிக நிறுவனங்கள் இளைஞா்களை பயிற்சிக்குத் தோ்வு செய்ய வேண்டும். ஆனால், அது கட்டாயமல்ல. அதுபோல, இந்தத் திட்டத்தில் சேரும் நிறுவனங்களுக்கு எந்தவித குறுக்கீடுகளும் இருக்காது. இது தேச நலனுக்கான திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 1.27 லட்சம் தொழில் பயிற்சி வாய்ப்புகளை அளிப்பதை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, கடந்த ஜனவரி முதல் 327 நிறுவனங்கள் சாா்பில் 1.18 லட்சம் பயிற்சி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டாம் கட்ட பயிற்சி திட்டத்துக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி தேதியாகும் என்றாா்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகையும், ஒரு முறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும்.

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

உ.பி.யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தின் தெஹுலி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு நவம்பர் 18... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

ஐஆர்சிடிசி நிலம், வேலை வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியின் சகோதரர் பிரபுநாத் யாதவ் பாஜக தலைமையிலான மத்திய அரசைக் கடுமையாகச் ச... மேலும் பார்க்க

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க