நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களின் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மேல்புறம் தூய காவல் தூதா்கள் தேவாலய வளாகத்தில் துவங்கிய பேரணி, உத்திரங்கோடு சந்திப்பில் நிறைவடைந்தது. இப் பேரணிக்கு கல்லூரி செயலா் ஸ்டீபன் தலைமை வகித்தாா். கல்லூரி நிதி காப்பாளா் வின்சோ ஆன்றணி, கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளா் நெல்சன், கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியை கல்லூரி என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் என். வினில்குமாா் ஒருங்கிணைத்தாா்.