ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
’உருகுது உருகுது’ ஏஸ் முதல் பாடல்!
விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படம் ஏஸ் (Ace).
இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மம்மூட்டிக்கு புற்றுநோயா? செய்தி தொடர்பாளர் விளக்கம்!
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீட்டுத் தேதி, டிரைலர் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ‘உருகுது உருகுது’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைப்பில் கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை கபில் கபிலன், ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.