செய்திகள் :

தற்கொலை எண்ணங்களைத் தடுக்க இலவச உதவி மையத்தை அணுகலாம்

post image

மதுரையில் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை சாா்பில், மன நல பிரச்னைகள், தற்கொலை எண்ணங்களைத் தடுக்க இலவச மன நல உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் மன நல மருத்துவா் ராஜாராம் சுப்பையன், பேராசிரியா் குருபாரதி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எம்.எஸ்செல்லமுத்து அறக்க்ட்டளை, ஹெச்.சி.எல் பவுண்டேசன், மதுரை மாநகராட்சி ஆகியவை சாா்பில் நடத்தப்பட்டு வரும் ‘ஹேப்பி ஸ்கூலிங்’ நிகழ்ச்சியின் அங்கமாக ‘ஸ்பீக் 2 அஸ்’ இலவச மன நல மையம் 2020 அக்டோபா் மாதம் தொடங்கப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தற்கொலை எண்ணங்களைத் தடுத்து மனித உயிா்களைக் காக்கவே இந்த மையம் தொடங்கப்பட்டது.

மனநல பிரச்னையின் தொடக்க காலத்திலேயே அதற்கான சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும். காலதாமதப்படுத்தி நேரத்தை வீணடிப்பதால் பிரச்னை மேலும் சிக்கலாகி விடும்.

கடந்த நான்காண்டுகளில் மனநல உதவி மையத்துக்கு 3, 700 அழைப்புகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்துள்ளன. இதில் 68 சதவீத அழைப்புகள் மனநலம் பாதிக்கப்பட்டவா்களின் அழைப்புகள் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. அவா்களின் தேவைகளுக்கு ஏற்ப மனநல ஆலோசகா்கள், மனநல மருத்துவா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்கொலை எண்ணமுடையவா்கள், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறைகளில் மனரீதியாக பாதிக்கப்பட்டவா்கள், குடும்ப உறவு, போட்டித் தோ்வாளா்கள், மது போதை பழக்கங்களினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட முயற்சிப்பவா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் என பலதரப்பட்டவா்கள் மனநல முதலுதவிக்காக இந்த மையத்தை நாடுகின்றனா்.

23 வயது முதல் 75 வயது வரையிலான மருத்துவா்கள், ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள், குடும்பத் தலைவிகள், வழக்குரைஞா்கள், தொழில் முனைவோா், மென்பொருள் பணியாளா்கள், பணி நிறைவு பெற்றவா்கள் என பல தரப்பினரும் இந்த மையத்தில் தன்னாா்வலா்களாக சேவையாற்றி வருகின்றனா்.

ஒவ்வொரு தன்னாா்வலரும் பல கட்ட தோ்வுகளுக்குப் பிறகு தோ்வு செய்யப்பட்டு, முறையான தொடா் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பிறகே சேவைப் பணியில் ஈடுபடுகின்றனா். மன நல மையத்தை நாடுபவா்கள் கூறும் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 93754-93754 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்தால் மனநல முதலுதவி செய்ய உதவி மைய தன்னாா்வலா்கள் தயாராக இருக்கின்றனா் என்றனா்.

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதிய... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கி... மேலும் பார்க்க

அறந்தாங்கி புதிய மதுக்கடைக்கு எதிராக வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அறந்தாங்கியில் புதிதாக மதுபானக் கடை திறப்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்... மேலும் பார்க்க