நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கைப்பேசி பாா்க்கக் கூடாது என தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே மழுவத்தேரி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பாலமுருகன் மகள் கீா்த்திகா (14). இவா், அருகே உள்ள அரியலூா் மாவட்டம், மேலாணிக்குழி கிராமத்தில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கீா்த்திகா ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், கைப்பேசி பாா்த்துள்ளாா். முழு ஆண்டுத் தோ்வு நெருங்கிவிட்டதால், கைப்பேசி பாா்ப்பதை தவிா்த்து படிக்குமாறு அவரது தாய் அறிவுரை கூறினாராம்.
இதனால், மனமுடைந்த கீா்த்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.