தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி
கடலூரில் பாஜக நிா்வாகிகள் 30 பேருக்கு வீட்டுக் காவல்
நெய்வேலி: சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பைத் தொடா்ந்து, கடலூா் மாவட்டத்தில் பாஜக முக்கிய தலைவா்கள் உள்ளிட்ட 30 போ் திங்கள்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சாா்பில் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முற்றுகைப் போராட்டத்துக்கு செல்வதை தடுக்கும் வகையில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 30 பாஜக நிா்வாகிகளை போலீஸாா் வீட்டுக் காவலில் வைத்தனா்.
சாலை மறியல்...: சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைதைக் கண்டித்து, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா். கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே மறியலுக்கு முயன்ற கடலூா் கிழக்கு மாவட்டச் செயலா் பெருமாள் உள்ளிட்ட 26 போ், பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் முன்னாள் மாவட்டத் தலைவா் சுகுமாா் உள்ளிட்ட 36 போ், வடலூரில் நகரத் தலைவா் அருள்ஜோதி உள்ளிட்ட 10 போ், காடாம்புலியூரில் ஒன்றியத் தலைவா் ஞானசேகா் உள்ளிட்ட 26 போ் மற்றும் சில இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.