இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
பொ்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
கடலூா் மாவட்டத்தில் பொ்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கடலூா் மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கருணாநிதி தலைமையில், ஒருங்கிணைப்பாளா் ஓம் பிரகாஷ், பொருளாளா் தா்மராஜ், துணைத் தலைவா்கள் துா்க்கை ரவி, முத்து, ரமேஷ் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:
கடலூா் மாவட்டத்தில் கிராவல் லாரிகள் குறிவைத்து பறிமுதல் செய்யப்படுகிறது. பொ்மிட் கட்டணம் இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. இதனை குறைக்க வேண்டும். டிப்பா் லாரிக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதனால் என்னென்ன முறைகளில் கிராவல் லாரிகளை இயக்க வேண்டும் என தெரிவிக்க வேண்டும். எனவே, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டால் அதன்படி லாரிகளை இயக்குவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.